
அரியலூர் அரசு மருத்துவமனையில், பிறந்த கால் மணி நேரத்தில் ஆண்குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு மருத்துவமனை துப்புறவு தொழிலாளர் ஒருவர், குப்பைத்தொட்டியில் குழுந்தை இருப்பதை கண்டுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடமும், மருத்துவமனை செவிலியர்களிடமும் இத் தகவலை தெரிவித்துள்ளார். குப்பைத் தொட்டியில் இருந்த ஆண் குழந்தைக்கு செவிலியர்கள் முதலுதவி அளித்தனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த குழந்தை பிரசவ வார்டில் பிறக்கவில்லை என்றும், செவிலியர்கள் யாரும் பிரசவம் பார்க்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. புறநோயாளிகள் பிரிவுக்கு அருகில் உள்ள கழிவறையில் சென்று பிரசவித்துவிட்டு வெளியே உள்ள குப்பைதொட்டியில் குழந்தையை வீசிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.