\
அரியலூர்: கரும்பு சக்கையை கொட்டுவதில் தகராறு; எஸ்.ஐ மனைவி மீது தாக்குதல்

அரியலூர்: கரும்பு சக்கையை கொட்டுவதில் தகராறு; எஸ்.ஐ மனைவி மீது தாக்குதல்

அரியலூர்: கரும்பு சக்கையை கொட்டுவதில் தகராறு; எஸ்.ஐ மனைவி மீது தாக்குதல்
Published on: 

அரியலூரில் முன்விரோதம் காரணமாக எஸ்.ஐ மனைவியை எதிர் வீட்டுக்காரர் தாக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவிவருகிறது.


அரியலூர் ராஜீவ் நகரில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் அரியலூர் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவருக்கும், இவரது வீட்டின் எதிரில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே வீடு கட்டுவதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.


இந்நிலையில் பொங்கல் கரும்பு சாப்பிட்ட சக்கையை போட்டதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரவிச்சந்திரன், அவரது மனைவி சீதா லெட்சுமி மற்றும் மகன் பிரவீன் ஆகியோர் சேர்ந்து உதவி ஆய்வாளர் செல்வராஜின் மனைவி சர்மிளாவை தாக்கியுள்ளனர். அவர்கள் தாக்கும் வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் மனைவி சர்மிளா அரியலூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதேபோல ரவிச்சந்திரனும் தன்னை அரிவாளைக் காட்டி மிரட்டியதாக புகார் கொடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com