"திராவிடம் என்ற சொல், சிலருக்கு வேப்பங்காயாக கசக்கிறது! அதனால்தான்..."- ஆர்.எஸ்.பாரதி

"திராவிடம் என்ற சொல், சிலருக்கு வேப்பங்காயாக கசக்கிறது! அதனால்தான்..."- ஆர்.எஸ்.பாரதி
"திராவிடம் என்ற சொல், சிலருக்கு வேப்பங்காயாக கசக்கிறது! அதனால்தான்..."- ஆர்.எஸ்.பாரதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், “மகளிருக்கு என்று இலவச பஸ் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டியுள்ளது. நான் அரசியலுக்கு வந்தபோது, அண்ணாமலையின் தந்தை கூட பிறந்திருக்கமாட்டார். ஆனால் இப்போது இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள மகளிருக்கான இலவச பஸ் திட்டத்தை பார்த்து, உ.பி-யில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் எங்களுக்கு வாக்களித்தால் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய பல திட்டங்கள் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பா.ஜ.க-வினர் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் ‘சனாதன ஆட்சி நடத்த வேண்டும். அது தான் நன்மை’ என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று தமிழக ஆளுநர் கூறுகிறார். பெண்கள் மேலாடை அணிந்திருந்தால் வரி, ஆண்கள் தாடி வைத்திருந்தால் வரி என்ற நிலைதான் கடந்த காலங்களில் இருந்தது. இதையெல்லாம் தந்தை பெரியார், நாரயணகுரு, ஐயா வைகுண்டர் போன்றோர் போராடி நீக்கவைத்தனர்.

திராவிடம் என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு வேப்பம் காயாக கசக்கிறது. ஆகையால் தான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது திராவிட மாடல் ஆட்சி என்றார். திராவிட மாடல் ஆட்சி என்றால் ஆரியர்களுக்கு எதிரான ஆட்சி. சீமான் பின்னால் செல்லும் இளைஞர்களை அழைத்து இதுபோன்ற வரலாறு குறித்து வகுப்பு எடுக்க வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பயங்கரமான ஊழல் நடைபெற்று வருகிறது. அங்கெல்லாம் ஆளுநர்கள் வாய் மூடி மௌனமாக இருக்கின்றனர். ஆனால் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களுக்கு, தொல்லை கொடுப்பதற்காவே ஆளுநர்களை அவர்கள் வைத்துள்ளனர். ஆனால், தமிழக முதல்வர் அதை சமார்த்தியமாக சமாளித்து வருகிறார்.

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 85 சதவீத வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார். வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் மகளிருக்கான ரூ.1000 உதவி தொகை தொடர்பாக அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு பெண்கள், முதல்வரை தனது மகனாக, சகோதரனாக பார்த்து வருகின்றனர்.

பெண்கள் ஒரு கட்சியை ஆதரிக்க ஆரம்பித்து விட்டால் 10 ஆண்டுகளுக்கு அந்த ஆட்சி, கட்சியை யாரலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது கடந்த கால வரலாறு. அண்ணாலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று தெரியவில்லை. இவருக்கு எப்படி ஐ.பி.எஸ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை, அண்ணாமலை சொல்வதில் ஒன்று கூட உண்மையில்லை

ஜெயலலிதாவின் ஆளுமையை, அண்ணமாலை அவருடைய தாய், மனைவியுடன் ஒப்பிட்டு பேசுகிறார். அண்ணாமலை மிரட்டலாம் என்று பார்க்கிறார். நாங்கள் இந்திரா காந்தியை பார்த்தவர்கள், மிசாவை சந்தித்தவர்கள், சர்காரிய கமிஷனை தவிடு பொடியாக்கிய கட்சி என்பதனை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com