காற்றில் பறந்ததா விதிகள்?! பாலைவனச் சாலைகளாக மாறும் பசுமை சூழ் நெடுஞ்சாலைகள்!

காற்றில் பறந்ததா விதிகள்?! பாலைவனச் சாலைகளாக மாறும் பசுமை சூழ் நெடுஞ்சாலைகள்!
காற்றில் பறந்ததா விதிகள்?! பாலைவனச் சாலைகளாக மாறும் பசுமை சூழ் நெடுஞ்சாலைகள்!

தமிழகத்தில் பல இடங்களில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக, சாலை ஓரங்களில் இருந்த மரங்களை அகற்ற விதிகளை முறையாக பின்பற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் இருபுறங்களிலும் நாவல்மரம், ஆலமரம், அரசமரம், வேப்பமரம், புளியமரம் என பல்வேறு மரங்கள் நிறைந்து காணப்படும். சாலைகளின் இருபுறங்களிலும் வளர்ந்து குடைபோன்று சூழ்ந்து நிழல் தருவதோடு கனிகளையும் கொடுத்தது. இவைகளை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது பல நகரங்களில் தங்க நாற்கரச் சாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சாலையோரங்களில் உயர்ந்து நிற்கும் மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்படுகின்றன.

தஞ்சாவூர் - திருச்சி, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இரு ஓரங்களிலும் அடர்ந்த மரங்கள் காணப்பட்டன. தற்போது மரங்கள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்தாலும், அதற்கு பதிலாக எவ்வித மரக்கன்றுகளையும் நட்டு பராமரிக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/J9wcLxdVf8Q" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

மரங்களை அகற்றினால், ஒரு மரத்துக்கு அதே மரத்தின் பத்து கன்றுகளை நடவேண்டும் என்ற விதி பெயரளிவிலேயே உள்ளதாகவும் கூறுகின்றனர் மக்கள். நவீன காலத்திற்கு நகர்ந்தாலும் மரங்களின் அவசியம் எக்காலத்துக்கும் தேவை என்பதை உணர்ந்து, சாலையோரங்களில் மரங்களை நட்டு முறையாக பராமரிக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com