\
கோயில்களில் தமிழில் அர்ச்சனை: பெயர்ப் பலகையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

கோயில்களில் தமிழில் அர்ச்சனை: பெயர்ப் பலகையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

கோயில்களில் தமிழில் அர்ச்சனை: பெயர்ப் பலகையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
Published on

'அன்னைத் தமிழில் அர்ச்சனை' திட்டத்தின் கீழ் கோயில்களில் வைக்கப்படும் பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக 47 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு "அன்னைத் தமிழில் அர்ச்சனை" என விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.

அதில், அர்ச்சகரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கும். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வைக்கப்படவிருக்கும் பதாகைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com