ரகுவின் மரணத்திற்கு அலங்கார வளைவே காரணம்: உயர்நீதிமன்றம்

ரகுவின் மரணத்திற்கு அலங்கார வளைவே காரணம்: உயர்நீதிமன்றம்
ரகுவின் மரணத்திற்கு அலங்கார வளைவே காரணம்: உயர்நீதிமன்றம்

கோவையில் உயிரிழந்த பொறியாளர் ரகுவின் மரணத்திற்கு சாலையில் வைக்கப்பட்ட அலங்கார வளைவே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுக் கம்பத்தில் மோதி இளைஞர் ரகு உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரகுவின் மரணத்திற்கு அலங்கார வளைவுதான் காரணம் என்பது தெளிவாக தெரிகிறது என்று நீதிபதிகள் கூறினர். அலங்கார வளைவுதான் காரணம் என்றாலும் மரண விசாரணைக்குள் செல்ல விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சாலையை மறைத்து பேனர்களை வைக்க அதிகாரிகள் அனுமதிப்பது எப்படி? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வரும் காலங்களில் நடைப்பாதை மற்றும் சாலைக்கு நடுவே பேனர்கள் வைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் கோவையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள கட்-அவுட் பேனர்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

கோவையில் அதிமுக சார்பில் டிசம்பர் 3 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டப்பட உள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, வ.உ.சி பூங்கா முதல், விமான நிலையம் வரை தொடர்ச்சியாக கட்அவுட், பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டன. இதில் சிங்காநல்லூர் அருகே வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு மீது மோதி இளைஞர் ரகு உயிரிழந்தார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எதிர்ப்புகள் எழுந்தவுடன், அவசர அவசரமாக, அந்த அலங்கார வளைவுகளை, கோவை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. ரகு உயிரிழந்த இடத்திலேயே Who Killed Ragu என்ற வாசகத்தை அவரது நண்பர்கள் சிலர் எழுதியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் #WhoKilledRagu என்ற ஹேஷ்டேக் பிரபலமானது. பின்னர் அவசர அவசரமாக சாலையில் எழுதப்பட்ட அந்த வாசகத்தை மாவட்ட நிர்வாகம் அழித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com