அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் - தேர்தல் அதிகாரி மீண்டும் விளக்கம்

அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் - தேர்தல் அதிகாரி மீண்டும் விளக்கம்
அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் - தேர்தல் அதிகாரி மீண்டும் விளக்கம்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை, 17 சுற்றுகளுக்குப் பதில் 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கூறிய நிலையில், தற்போது வழக்கம்போல் 17 சுற்றுகளாக நடைபெறும் என விளக்கமளித்துள்ளார்.

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்து முடிந்தது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் தளவாபாளையத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை திமுக வேட்பாளர், செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்டார். 

பின்னர் அவர், ‘அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தலில் 63 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் வாக்கு எண்ணிக்கைக்கு 2 அறைகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோருக்கு இந்த அறைகள் போதுமானது இல்லை. அரங்கம் போன்ற பெரிய இடத்திற்கு வாக்கு எண்ணிக்கையை மாற்ற வேண்டும்’ என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து அவர் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம், அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கூறினார். இந்நிலையில், வழக்கம்போல் 14 மேஜைகள் போடப்பட்டு 17 சுற்றுகளாகதான் வாக்குகளை எண்ண முடிவு செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இட நெருக்கடி காரணமாக 14 மேஜைகளை 8 ஆக குறைக்க முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பெரிய அறையில் நடைபெறுவதால் வழக்கம் போல 14 மேஜைகள் போடப்பட்டு 17 சுற்றுகளாகதான் வாக்குகளை எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார். 

மேலும் அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக அளித்த மனுவை அடுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com