‘இன்று எச்.ஐ.வி... அன்று மஞ்சள் காமாலை’ - அலட்சியத்தால் தொடரும் கொடூரம்

‘இன்று எச்.ஐ.வி... அன்று மஞ்சள் காமாலை’ - அலட்சியத்தால் தொடரும் கொடூரம்
‘இன்று எச்.ஐ.வி... அன்று மஞ்சள் காமாலை’ - அலட்சியத்தால் தொடரும் கொடூரம்

ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்டதால் சாத்தூரில் கர்ப்பிணி பாதிக்கப்பட்டது போல், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நோயாளிகளுக்கு அலட்சியமாக டயாலிசிஸ் செய்ததால் 18 பேருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த 2014ஆம் ஆண்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 18 பேர் டாயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது, ஹெபடைடிஸ் சி எனப்படும் மஞ்சள் காமாலை வைரஸ் இருப்பது தெரியவந்தது. 

ஒரே குழாய் பலருக்கு பயன்படுத்தப்பட்டதே, இதற்கு காரணம் எனக் கூறி, பாதிக்கப்பட்டோர் சார்பில் அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வ‌ழக்கு தொடர்ந்தது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக ராமநாதன் கமிஷன் இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் உயிரிழந்து விட்டனர். மருத்துவமனையின் இந்த அலட்சி போக்கு குறித்தும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com