கல் துகள்களை அகற்றாமல் தையல்... அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்

கல் துகள்களை அகற்றாமல் தையல்... அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்
கல் துகள்களை அகற்றாமல் தையல்... அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்

சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் காலின் உள்ளே இருந்த கல் துகள்கள் அகற்றப்படாமல் தையல் போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்குடி ஆவணம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தை தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். நேற்று மாலை 4 மணிக்கு மதிவாணனின் கணுக்காலில் தையல் போட்டுள்ளனர். தையலை மருத்துவர் போடாமல் ஊழியர்கள் போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி இருந்துள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் மதிவாணன். அங்கு அவருக்கு மருத்துவர் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது தையல் போட்ட பகுதியின் உள்ளே 3 கல் துகள்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மதிவாணன் விபத்தில் சிக்கியபோது தரையில் கிடந்த கற்கள் காலின் உள்ளே போயிருந்ததை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சுத்தம் செய்யாமல் தையல் போட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மதிவாணனுக்கு தனியார் மருத்துவமனையில் ஆபரேசன் செய்து கற்களை அகற்றவுள்ளனர். அரசு மருத்துவமனையின் அலட்சியப் போக்கு தான் இதற்கு காரணம் என்று மதிவாணன் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து சம்பவம் நடந்த சமயத்தில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தெரிவித்தார். விசாரணை முடிவு இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com