தண்ணீரால் சூழ்ந்த சுடுகாடு பாதை: சடலத்தை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் அவலம்

தண்ணீரால் சூழ்ந்த சுடுகாடு பாதை: சடலத்தை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் அவலம்

தண்ணீரால் சூழ்ந்த சுடுகாடு பாதை: சடலத்தை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் அவலம்
Published on

சுடுகாடு பாதை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு இருப்பதால் இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் கயிறு கட்டி இழுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள ஆவணியாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மதுரா சஞ்சீவி ராயபுரம் கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில், தொடர் கனமழை காரணமாக. 6 அடிக்கு மேல் ஆற்றுநீர் நிரம்பி வழிந்தோடுகிறது. இதனால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல முடியாமல் சடலத்தை சுமந்து செல்லும் பாடையை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் அவல நிலைக்கு கிராம மக்கள் ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து இந்த கிராம மக்கள், சுடுகாட்டிற்குச் செல்ல பாலம் கட்டித்தருமாறு மாவட்ட நிர்வாகத்திடமும், அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com