ஆரணி: வெறிநாய் கடித்து இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் - அச்சத்தில் மக்கள்

ஆரணி: வெறிநாய் கடித்து இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் - அச்சத்தில் மக்கள்

ஆரணி: வெறிநாய் கடித்து இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் - அச்சத்தில் மக்கள்
Published on

ஆரணி அருகே வெறிநாய் கடித்ததில் இரண்டு பெண்கள் ஒரு சிறுவன் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்திலுள்ள மேட்டு தெருவில் இன்று அதிகாலை வீட்டின் வெளியே தின்ணையில் படுத்திருந்த இரண்டு பெண்கள் ஒரு சிறுவன் உள்பட பத்து நபர்களையும் 5 மாடுகளையும் தெருவில் சுற்றித் திரியும் வெறிநாய் கடித்துள்ளது. இதில் காயமடைந்த அனைவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே இரவில் வெறிபிடித்த நாய் ஒன்று 10 நபர்களை கடித்து அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதைத் தொடர்ந்து மேல் சீசமங்கள கிராம மக்கள் பீதியில் உறைந்து செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com