\
அரக்கோணம்: கிணற்றில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு

அரக்கோணம்: கிணற்றில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு

அரக்கோணம்: கிணற்றில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு
Published on: 

அரக்கோணம் அருகே விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவனூர் கிராமத்தில் உள்ள முனுசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றின் அருகே இரு இளைஞர்களின் உடைமைகள் இருப்பதாக அரக்கோணம் நகர காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற காவல்துறை மற்றும் அரக்கோணம் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் சென்னை மாதவரத்தைச் சேர்ந்த ரோஷன் (28) மற்றும் சென்னை பெரம்பூரை சேர்ந்த யுவராஜ் (38) என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரக்கோணம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com