Headlines
Headlinespt

Headlines|திருச்செந்தூரில் இரு தரப்பினர் இடையே முற்றிய மோதல் முதல் தமிழகத்தை குளிர்வித்த மழை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, திருச்செந்தூரில் இரு தரப்பினர் இடையே முற்றிய மோதல் முதல் தமிழகத்தை குளிர்வித்த மழை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்திப்பு முதல் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை முன்னேற்றத்துக்கு வரவேற்பு.

  • போப் பிரான்சிஸ் மறைவையொட்டி இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க மத்திய அரசு அறிவிப்பு..

  • திருச்செந்தூரில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல். 5 பேருக்கு அரிவாள் வெட்டு, பதற்றம் நிலவுவதால் காவல் துறையினர் குவிப்பு.

  • மராத்தியை தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை எனும் மஹாராஷ்டிரா முதல்வரின் நிலைப்பாட்டை, மத்திய அரசு அங்கீகரிக்குமா? என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி.

  • பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறிவிட்டு கூட்டணி வைத்ததாக அதிமுக மீது முதல்வர் ஸ்டாலின் விமர்சனம். நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என அதிமுக நிபந்தனை விதிக்குமா? எனவும் கேள்வி.

  • அதிமுக-பாஜக கூட்டணியால் முதல்வர் அச்சம் அடைவது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.

  • அதிமுகவில் தற்போதும் தமக்கு ஸ்லீப்பர் செல்கள் உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி. அதிமுகவுக்கும் தங்களுக்கும் இருப்பது பங்காளி சண்டை என்றும் விளக்கம்.

  • தமிழகத்தில் HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என சட்டப்பேரவையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

  • பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள் என தவெக தலைவர் விஜய், எக்ஸ் தளத்தில் பதிவு. போராட்டம் ஆயிரம் நாட்களை கடந்த நிலையில், நாளை நமதே எனக்கூறி விமான நிலைய எதிர்ப்புக் குழுவினருக்கு ஆதரவு.

  • சித்திரை திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் தங்க கருட சேவை. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

  • தமிழகத்தில் கோடை வெயிலுக்கு மத்தியில் ஒருசில இடங்களில் கனமழை. ஸ்ரீவைகுண்டத்தில் சூறைக்காற்றால் ஏராளமான வாழை மரங்கள் சேதம்.

  • திருச்செங்கோட்டில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம். ஏரியை மீன் பாசி குத்தகை ஏலத்துக்கு விடக்கூடாது என வலியுறுத்தல்.

  • 2 செயற்கைக்கோள்களை விண்வெளியில் 2 ஆவது முறையாக இணைத்து இஸ்ரோ சாதனை. விண்வெளி துறையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் முன்னேற்றம் என மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் பெருமிதம்.

  • கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்கு. உச்ச நீதிமன்றத்தின் விரிவான அமர்வுக்கு மாற்றம்.

  • போர் நிறுத்தம் குறித்து உக்ரைனுடன் நேரடியாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார். ரஷ்ய அதிபர் புடின் கருத்து.

  • அமெரிக்காவில் 300 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து. அவசர வழியாக வெளியேறிய பயணிகள்.

  • ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்திய குஜராத். 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டைட்டன்ஸ்.

  • தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ் குமாருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பு. 2024ஆம் ஆண்டு அரசு அதிகாரிகளை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு.

  • ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் போன்று காவல் துறையினருக்கு மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை . காவலருக்கான விடுமுறை அரசாணையை அமல்படுத்தக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com