\
வெடித்தது ஆப்பிள்! இளைஞர் காயம்

வெடித்தது ஆப்பிள்! இளைஞர் காயம்

வெடித்தது ஆப்பிள்! இளைஞர் காயம்
Published on

திருவாரூர் மாவட்டம் முகந்தனூரில், பேசிக் கொண்டிருந்த போது ஆப்பிள் செல்போன் வெடித்ததில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

சச்சின் என்ற இளைஞர் தன்னிடம் உள்ள ஆப்பிள் ஐஃபோனில், இரு சக்கர வாகனத்தில் சென்றவாறே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த போன் வெடித்து‌ச் சிதறியதில் நிலை குலைந்த சச்சின் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு முகம், தாடை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com