\
விற்பனைக்கு எடுத்துச் சென்ற அப்பள பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள்

விற்பனைக்கு எடுத்துச் சென்ற அப்பள பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள்

விற்பனைக்கு எடுத்துச் சென்ற அப்பள பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள்
Published on

வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 1.50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அப்பளம் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து மினி ஆட்டோவுக்கு சீல் வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி காளியப்பன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது திருப்பத்தூர் சி.கே.சி நகர் பகுதியில் இருந்து வீடுகளில் தயாரிக்கப்படும் அப்பள பாக்கெட்டுகளை விற்பனைக்காக வாணியம்பாடியில் உள்ள கடைகளுக்கு மினி ஆட்டோ மூலம் வினோத் என்பவர் கொண்டுவந்தார்.

அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி இருந்த அப்பளம் பாக்கெட்டுகளை மினி ஆட்டோவுடன் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று சீல் வைத்தனர். அதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ரூபாய் என தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com