தமிழ்நாடு
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?: அப்போலோ நிர்வாகம் இன்று விளக்கம்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?: அப்போலோ நிர்வாகம் இன்று விளக்கம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று விளக்கமளிக்க உள்ளது.
இது தொடர்பாக அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அப்போது லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும், ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என விளக்கமளிக்கிறார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.