\
’மருத்துவ நெறிமுறைப்படியே ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள்’ - அப்போலோ மருத்துவர்கள் வாக்குமூலம்

’மருத்துவ நெறிமுறைப்படியே ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள்’ - அப்போலோ மருத்துவர்கள் வாக்குமூலம்

’மருத்துவ நெறிமுறைப்படியே ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள்’ - அப்போலோ மருத்துவர்கள் வாக்குமூலம்
Published on: 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக சென்னை அப்போலோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் எக்மோ கருவி பொருத்துவது தேவையா என ஆலோசித்து, தேவையில்லை என்ற முடிவுக்கு வந்ததாகவும் மருத்துவர் பால் ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதேபோல் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று, அதாவது ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும், அப்போது அவர் நலமுடன் இருந்தார் என்றும் அப்போலோவின் மூத்த நுரையீரல் மருத்துவர் நரசிம்மன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதேபோல் வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் எஞ்சியுள்ள அப்போலோ மருத்துவர்களிடம் மறு விசாரணை நடத்தப்பட உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com