'எல்லோர் இல்லங்களிலும் நிறைந்தவர் அப்துல்கலாம்' - இறையன்பு ஐஏஎஸ் பகிரும் நினைவுகள்!!

'எல்லோர் இல்லங்களிலும் நிறைந்தவர் அப்துல்கலாம்' - இறையன்பு ஐஏஎஸ் பகிரும் நினைவுகள்!!
'எல்லோர் இல்லங்களிலும் நிறைந்தவர் அப்துல்கலாம்' -   இறையன்பு ஐஏஎஸ் பகிரும் நினைவுகள்!!

தமிழக இளைஞர்களின் நம்பிக்கை அடையாளமாக மாறிப்போய்விட்ட முன்னாள் குடியரசுத் தலைவரும் அறிவியல் விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே. அப்துல்கலாம் நினைவுநாள் இன்று. அவர் மறைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் எழுதிய அக்னிச்சிறகுகள் நூல் விற்பனையில் சாதனை படைத்தது. மிகப்பெரும் மனமாற்றத்தை இளம் தலைமுறையினரிடம் அந்த அனுபவ நூல் ஏற்படுத்தியது. மாணவர்களை ஊரெல்லாம் தேடிச்சென்று ஊக்கமூட்டிய அப்துல்கலாம் பற்றிய நினைவுகளை இறையன்பு ஐஏஎஸ் பகிர்ந்துகொள்கிறார்.

இந்திய ஜனாதிபதியாக இருந்தாலும் மக்களின் மத்தியில் மனாதிபதியாக இருந்தார் அப்துல்கலாம். எளிமையும் இனிமையும் அர்ப்பணிப்பும் நாட்டுப்பற்றும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்தாலும் கடைசி குடிமகனைப்போல அனைவரிடமும் இயல்பாகப் பழகியவர்.

தலைநகரில் உள்ள ராஷ்ட்ரபதி பவனின் கதவுகளை எளியோருக்கும் அகலத் திறந்துவைத்தவர். ஒருநாளும் தன்னை அவர் உயர்ந்தவராக கருதிக்கொண்டதில்லை. அதனால் பாமர மக்களும் அவரை நேசித்தனர். காந்திக்குப் பிறகு கலாம் என்ற பெயரே எல்லோர் இல்லங்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மாணவர்களுக்கு அவர் பெயரைக் கேட்டாலே, காதுகளுக்கு கெளரவம் கிடைத்ததுபோன்ற ஒரு கர்வம் வந்துவிடும். அவர் அக்னிச்சிறகுகளை உருவாக்கினாலும், குளிர்ந்த நீரோடையாக எல்லோர் இதயங்களில் இருந்தும் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கிறார்.

மூன்று முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே இந்தியா 2020 பற்றி தமிழக முதலமைச்சரின் முன்பு அவர் விளக்கம் அளித்தபோது சந்தித்தேன். வாசல்வரை  சென்று அந்தப் பெரிய மனிதரை வழியனுப்பிவைத்ததில் பெருமைப்படுகிறேன்.

இரண்டாவது முறை மாணவர்களின் கல்வி நிகழ்ச்சியில் ஒரே மேடையில் அவருடன் பேசிய நினைவுகள் மறக்கமுடியாதவை.  என் நூல்களின் கருத்தரங்கம் ஒன்றை மதுரை மன்னர் கல்லூரியில் நடத்தியபோது, அவர் தலைமையேற்றுப் பேசினார். இந்த மூன்று முறையும் அவரிடம் எந்த மாற்றமுமில்லை” என்று நெகிழ்கிறார் இறையன்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com