\
வழக்கைத் திரும்பப்பெறக் கூறி ஆந்திர காவல்துறை மிரட்டல்

வழக்கைத் திரும்பப்பெறக் கூறி ஆந்திர காவல்துறை மிரட்டல்

வழக்கைத் திரும்பப்பெறக் கூறி ஆந்திர காவல்துறை மிரட்டல்
Published on

திருப்பதி அருகே செம்மரங்களைக் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை திரும்பப் பெறுமாறு, ஆந்திர காவல்துறையினர் தன்னை மிரட்டுவதாக, கொல்லப்பட்டவரது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட சசிகுமார் என்பவரது மனைவி முனியம்மாள் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், வழக்கைத் திரும்பப் பெறுவதற்கான மனுவில் கையெழுத்திடுமாறு ஆந்திர காவல்துறையினர் தம்மை வந்து மிரட்டுவதாகவும், அவர்களுடன் தமிழக காவல்துறை அதிகாரியும் வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கணவர் கொல்லப்பட்டதால், வாழ்வாதாரத்திற்கான வழியின்றி குழந்தைகளுடன் தவித்து வரும் தனக்கு, உரிய நிவாரணம் கிடைக்காமல் கையெழுத்திட முடியாது என்று காவல்துறையினரிடம் தாம் கூறிவிட்டதாகவும் முனியம்மாள் தெரிவித்துள்ளார். வழக்கைத் திரும்பப்பெறாவிட்டால் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடும் என அவர்கள் மிரட்டிச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com