\
கதிராமங்கலத்திலும் ஆன்டி-இந்தியன்ஸ்: ஹெச்.ராஜா ரிப்பீட்!

கதிராமங்கலத்திலும் ஆன்டி-இந்தியன்ஸ்: ஹெச்.ராஜா ரிப்பீட்!

கதிராமங்கலத்திலும் ஆன்டி-இந்தியன்ஸ்: ஹெச்.ராஜா ரிப்பீட்!
Published on: 

கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவில் தீ வைத்தவர்கள் மீதும், தீயணைப்பு வீரர்களைத் தடுத்தவர்கள் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, கலவரத்தில் ஈடுபட்டவர்களைத் தடுக்காவிட்டால் தமிழகத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் எல்லா இடங்களிலும் போராட்டம் தலைதூக்கிவிடும் என்று அவர் கூறினார். மேலும், “எண்ணெய் கசிவு உள்ளது. அதை ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால் அங்கு தீ வைத்தது யார்? பற்றி எரியும் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்களைத் தடுத்த யார்? காவல்துறையை தாக்கியவர்கள் யார்? தமிழ்நாட்டில் இந்த பிரிவினைவாத, தேசவிரோத, தீயசக்தியைகள் முழுமையாக ஒடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கதிராமங்கலம் மட்டுமில்லாமல் தமிழகத்தில் எண்ணெய் எடுக்கும் 170 இடங்களிலும் இதுபோல் நடக்கும் என்று அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com