தமிழ்நாடு
கடந்த 75 நாட்கள் லஞ்ச ஒழிப்பு சோதனை - 33 அரசு அதிகாரிகள் கைது
கடந்த 75 நாட்கள் லஞ்ச ஒழிப்பு சோதனை - 33 அரசு அதிகாரிகள் கைது
அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதிமுதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், “தமிழகத்தில் 127 அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் ரூ. 6.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 7.232 கிலோ தங்கம், 9.843 கிலோ வெள்ளி, 10.52 காரட் வைரம் ஆகியவையும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 62.82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ. 37 லட்சத்துக்கு ஃபிக்சட் டெபாசிட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.