தமிழ்நாடு
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் சர்தார், உதகையில் நகராட்சி ஆணையராக பணியாற்றிய காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையில், நீதிமன்ற அனுமதியுடன் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் சிவபாலன் தலைமையில் 8 அதிகாரிகள், சர்தாரின் அரசு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், துரைப்பாக்கத்திலுள்ள சர்தாரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.