’எஸ்.பி.வேலுமணி - சி.விஜயபாஸ்கர்’ தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

’எஸ்.பி.வேலுமணி - சி.விஜயபாஸ்கர்’ தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
’எஸ்.பி.வேலுமணி - சி.விஜயபாஸ்கர்’ தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சுகாதாரம் - குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் தற்போது சோதனை தொடங்கியுள்ளது. அவர் தனது பணி காலத்தில் திருவள்ளுர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்கா, மஞ்சக்கரனை கிராமம், `வேலன் நகரில் செயல்படும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 300 உள்நோயாளி படுக்கை வசதிகளுடன் இரண்டு வருடங்களாக செயல்படுவகின்றது. மேற்படி மருத்துவமனையானது புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது’ என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக மேற்படி மருத்துவமனைக்கு Essentiality Certificate வழங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு  முன்வைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற அவருக்கு சொந்தமான சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும் மதுரை, தேனி, புதுக்கோட்டை திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களில் தலா ஒரு இடத்திலும் இன்று 13.09.2022 - ம் தேதி மொத்தம் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி தற்போதைய தொண்டாமத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராவார். இவர், கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தின் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது, மிகப் பெரிய அளவில் முறைகேடு செய்து - தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கினார் என்ற குற்றச்சாட்டு  முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சொல்லப்படுகிறது.

இதனால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அது சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்றி சென்னையில் 10 இடங்களிலும், கோயம்பத்தூரில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் ஆகமொத்தம் 26 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனை நடைபெற்று வருவதையடுத்து எஸ் பி வேலுமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ் பி வேலுமணி என் நெருங்கிய நண்பரான சந்திரசேகர் வீடு, மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com