சாலையை வழிமறித்து நின்ற காட்டு யானை: ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

சாலையை வழிமறித்து நின்ற காட்டு யானை: ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

சாலையை வழிமறித்து நின்ற காட்டு யானை: ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை
Published on

அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தேவர்மலை பகுதியைச் சேர்ந்த சிவராஜி. இவரது மனைவி சிவம்மாள். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிவம்மாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது வரும் வழியில் தாமரைக்கரை பர்கூர் வழியில் ஒற்றை காட்டு யானை சாலையை வழிமறித்து நின்றுள்ளது. இதனால் ஓட்டுனர் ஆம்புலன்ஸை அதே இடத்தில் நிறுத்தினார். இதையடுத்து சுமார் அரைமணி நேரம் ஆம்புலன்ஸ் அங்கேயே நின்றது. இதனால் ஓடும் ஆம்புலன்ஸில் கர்ப்பிணியான சிவம்மாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் மருத்துவ உதவியாளர் சிவா ஆம்புலன்ஸ் உள்ளேயே பிரசவம் பார்த்தார்.

அப்போது அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தாயும் செய்யும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓடும் ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சிவாவை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com