\
ஒரு மாணவர் மீதுமற்றொருவர் சரமாரி தாக்குதல்; வைரலான வீடியோ: நேரில் அழைத்து கண்டித்த போலீஸ்

ஒரு மாணவர் மீதுமற்றொருவர் சரமாரி தாக்குதல்; வைரலான வீடியோ: நேரில் அழைத்து கண்டித்த போலீஸ்

ஒரு மாணவர் மீதுமற்றொருவர் சரமாரி தாக்குதல்; வைரலான வீடியோ: நேரில் அழைத்து கண்டித்த போலீஸ்
Published on

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு மாணவனை மற்றொரு மாணவன் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

தாக்குதல் நடத்தும் மாணவனுடைய சமூகம் ஒரு இடத்தில் மேளம் அடிக்கும் போது மற்றொரு சமூகத்தினர் அவர்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவன் பள்ளியில் இந்த மாணவனை அழைத்து சென்று அடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இருதரப்பினரையும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் அழைத்து பேசி, இது மாணவர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பியதாக தெரிகிறது. காவல்துறையினரும் பள்ளி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர்களை சொல்ல மறுத்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com