\
ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது
Published on

ராசிபுரம் குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் செவிலியர் அமுதா உள்ளிட்ட பலர் கடந்த பல ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்‌டதாக‌‌ ஓய்வு பெற்ற செவிலி அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் தரகர்களாக செயல்பட்டவர்கள் என 8 பேரை கா‌வல்துறையினர் கைது செய்தனர். 

இதனிடையே குழந்தை விற்பனையில் தொடர்புடைய கூட்டுறவு வங்கி‌ அலுவலக உதவியாளராக‌‌ பணிபுரிந்த அமுதாவின் கணவர் ரவிச்சந்திரன் மற்றும் கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்‌பட்டனர்.

இதைத்தொடர்ந்து விரிவான விசாரணைக்காக இந்த வழக்கு கடந்த 29 ஆம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அவர்களின் முதற்கட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. இன்னும் விசாரணை நடத்தினால் மேலும் முழுமையானத் தகவல்கள் கிடைக்கும் என்பதால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். 

மனுவை விசாரித்த நீதிமன்றம் அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோடு இடைத்தரகர் அருள்சாமி ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்ட வழக்கில் சேலம் சர்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com