\
சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு 

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு 

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு 
Published on

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும் விபத்துக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயகோபால் மீது இதுவரை 279, 304 ஏ, 336 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது 308 பிரிவின் கீழ் பரங்கிமலை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயகோபால் உறவினர் மேகநாதன் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் சேர்த்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com