தமிழகத்தில் மே 3 முதல் பிளஸ்-2 பொதுத்தேர்வு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் மே 3 முதல் பிளஸ்-2 பொதுத்தேர்வு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் மே 3 முதல் பிளஸ்-2 பொதுத்தேர்வு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் பள்ளிகளில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. மேலும் செய்முறை வகுப்புகளும், வாரத்தில் இரண்டு நாக்ள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 03-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மே 3 மொழிப்பாடம்

மே 5 ஆங்கிலம்

மே 7 கணினி அறிவியல்

மே 11 இயற்பியல், பொருளாதாரம்

மே 17 கணிதம், விலங்கியல்

மே  19 உயிரியல், வரலாறு

மே 21 வேதியியல், கணக்குப்பதிவியல்

உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 8  லட்சம் மாணவ மாணவியர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பொதுத்தேர்வு நடக்கும் எனவும் காலை 10 மணி முதல் 10. 10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர் என்றும்  காலை 10. 10 மணி முதல் 10.15  மணி வரை மாணவர்களின் விபரங்கள் பரிசோதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com