56-வது அருட்பிரகாச வள்ளலார்-மகாத்மா காந்தி விழா! சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருது அறிவிப்பு!

சென்னையில் 56-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார்-மகாத்மா காந்தி விழா அக்டோபர் 1-ம் தேதி தொடங்குகிறது.
சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள்
சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள்web

56-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார்-மகாத்மா காந்தி விழா, மயிலாப்பூர் ஏவிஎம் இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் நா.மகாலிங்கம் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நா.மகாலிங்கம் விருது : முதல் பரிசு (நிலத்தின் விளிம்புக்கு)

நா. மகாலிங்கம் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக, டேவிட் கிராஸ்மேனின் ஆங்கில நாவலான 'நிலத்தின் விளிம்புக்கு' என்கிற மொழிபெயர்ப்புக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எழுத்தாளர் அசதா மொழிபெயர்த்துள்ளார்.

நிலத்தின் விளிம்புக்கு
நிலத்தின் விளிம்புக்கு

போர் என்பது மனித வரலாற்றின் ஒரு பாகமாக இருந்திருப்பினும், யூத இனம் போன்று காலம் காலமாக போரின் வேதனைகளை அனுபவித்த வேறொரு இனம் இருக்க முடியாது. இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் இஸ்ரேலியப் படைவீரனாகப் போருக்குச் சென்ற தனது மகனின் மரணச்செய்தி வந்து விடுமோ என்று அச்சப்பட்டு அதிலிருந்து விடுபடுவதற்காக ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு தாயின் வேதனையை விவரிக்கிறது இந்நாவல்”. இந்நூலுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

2வது பரிசு (கருங்குன்றம் ; தமிழகத்தில் தேவதாசிகள்)

சிறந்த மொழிபெயர்ப்புக்கான இரண்டாம் பரிசு, மமாங் தய்யின் 'கருங்குன்றம்' நாவலை மொழிபெயர்த்த கண்ணையன் தட்சிணாமூர்த்தி மற்றும் கே.சதாசிவனின் 'தமிழகத்தில் தேவதாசிகள்' வரலாற்று ஆய்வு நூலை மொழிபெயர்த்த கமலாலயன் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

கருங்குன்றம்
கருங்குன்றம்

கருங்குன்றம்: இது அருணாசலப் பிரதேசத்தை மையமாகக் கொண்டிருக்கிற ஒரு நாவல். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து கிறித்தவ பாதிரியார்கள் இந்தியாவின் மரபு சார்ந்த சமூகங்களின் மீது மொழி மற்றும் பண்பாட்டுத் தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு வந்திருக்கின்றனர். அதே சமயம் தாங்கள் நம்பிக்கை கொண்ட ஒரு சமயத்தின் செய்தியைத் தங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு சமூகத்திற்குக் கொண்டு செல்வதற்கு, இந்த இறையூழியர்கள் பல அவமானங்களையும், கொடுமைகளையும் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அருணாசலப்பிரதேசம் வழியாக திபெத்திற்குச் செல்ல முயற்சிக்கும் ஒரு ஃபிரெஞ்சுப் பாதிரியாரின் அனுபவத்தையும், ஒரு செழுமையான பழங்குடிப் பண்பாட்டையும் கருங்குன்றம் நூல் முன் நிறுத்துகிறது.

தமிழகத்தில் தேவதாசிகள்
தமிழகத்தில் தேவதாசிகள்

தமிழகத்தில் தேவதாசிகள்: இந்நூலில் தமிழகத்தில் ஆலயப் பண்பாட்டோடு மிக நெருங்கிய தொடர்புடைய தேவதாசி முறை கலைகளைக் காத்துத் தந்த வரலாறும், தேவதாசிகள் ஆலயங்களுக்கு அளித்த கொடைச் சிறப்பும் விளக்கப்பட்டுள்ளன. இரண்டு நூல்களுக்கும் தலா ரூ.50,000 ரொக்கம் பரிசளிக்கப்படுகிறது.

3வது பரிசு (அத்தங்கி மலை ; ராணுவ நினைவலைகள் ; மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடம்)

பி.அஜய் பிரசாத்தின் தெலுங்குக் கதைகளை 'அத்தங்கி மலை' என்ற பெயரில் மொழிபெயர்த்த மாரியப்பன், க.கர்னல் ஜேம்ஸ் வெல்ஷின் 'எனது ராணுவ நினைவலைகள் 1-2' நூலை மொழிபெயர்த்த ப.கிருஷ்ணன், கொரியக் கவிதைகளை 'மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்' என்ற பெயரில் மொழிபெயர்த்த பா.ரவிக்குமார் மற்றும் ப.கல்பனா ஆகிய இருவர், கேரளப் பழங்குடிக் கவிதைகளை மொழிபெயர்த்த நிர்மால்யா ஆகியோருக்கு மூன்றாம் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நால்வருக்கும் தலா ரூ.25,000 பரிசு வழங்கப்படுகிறது.

மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில்
மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில்

இவ்விருதுகள் அருட்செல்வரின் நினைவு நாளான அக்டோபர் 2ஆம் நாள் சென்னை ஏவி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுவிருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com