அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு
Published on

புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் டிசம்பர் 18, 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் என பல்கலை கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

கடந்த 16-ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வரலாறு காணாத பேரழிவை டெல்டா மாவட்ட மக்கள் சந்தித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் ஊடுருவிய கஜா புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், உறவாக வளர்த்து வந்த ஆடு, மாடுகளையும் சூறையாடி சென்றுள்ளது.

கஜா புயலினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் டெல்டா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே கஜா புயல் அறிவிப்பால் அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் டிசம்பர் 18, 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் என பல்கலை கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com