\
Annamalai Unveils New Strategy to Pick Leaders
அண்ணாமலைPt web

அண்ணாமலை ஆரம்பித்த இயக்கம்.. நிர்வாகிகளைத் தேர்வு செய்ய புதிய வியூகம்!

’இது நம்ம இயக்கம்’ (we the leaders) என்ற பெயரில் அவர் ஆரம்பித்துள்ள இயக்கத்தில் இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
Published on

தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து புதிய மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் விஜயைப்போலவே ஒருசிலர், தனிக்கட்சி இயங்கும் கனவில் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், நீண்டகாலம் பாஜகவில் இருந்த அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி, தனி இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். ’இது நம்ம இயக்கம்’ (we the leaders) என்ற பெயரில் அவர் ஆரம்பித்துள்ள இயக்கத்தில் இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.

அண்ணாமலை
அண்ணாமலைpt web

இந்த நிலையில், அண்ணாமலையின் ‘We the Leaders’ இயக்கம், அரசியல் கட்சியாக மாற்றப்பட்ட பிறகு, அதில் கிளை முதல் மாநில அளவிலான பதவிகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கப் புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள APJ Abdul Kalam centre for ethics and politics மூலம் வழங்கப்படும் திறன் பயிற்சியில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் அரசியல் நோக்கம் மற்றும் நிர்வாகிகளுக்கான தகுதிகளை விளக்கும் பயிற்சிக்கு பிறகே பதவிகள் ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com