\
என்ஐஏ விசாரணை தேவை - பாஜக அலுவலக பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து அண்ணாமலை

என்ஐஏ விசாரணை தேவை - பாஜக அலுவலக பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து அண்ணாமலை

என்ஐஏ விசாரணை தேவை - பாஜக அலுவலக பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து அண்ணாமலை
Published on

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை அவசியம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''பாஜக தலைமையகம் மீதான குண்டுவீச்சு சம்பவத்தின் உண்மை பின்னணியை கண்டறிய வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் நீட் தேர்வு ஆதரவு காரணமாக குண்டுவீசியதாக கூறுவது நகைச்சுவை.

குண்டுவீச்சு சம்பவத்தில் மிகப்பெரிய சதி உள்ளது; இதனை விரிவாக விசாரிக்க வேண்டும். தடயத்தை காவல்துறை அழித்துள்ளது. எனவே என்.ஐ.ஏ விசாரணை வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com