\
திட்டமிட்டபடி மேகதாது அணைக்கு எதிராக ஆக. 5ல் உண்ணாவிரதப் போராட்டம்: அண்ணாமலை

திட்டமிட்டபடி மேகதாது அணைக்கு எதிராக ஆக. 5ல் உண்ணாவிரதப் போராட்டம்: அண்ணாமலை

திட்டமிட்டபடி மேகதாது அணைக்கு எதிராக ஆக. 5ல் உண்ணாவிரதப் போராட்டம்: அண்ணாமலை
Published on

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பிரதமர் மோடி நிச்சயம் சம்மதிக்க மாட்டார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக அரசு மேகதாது அணைகட்ட தீவிரம் காட்டிவரும் நிலையில், தமிழக அரசு அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என தீர்க்கமாகத் தெரிவித்தார். அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மேகதாது அணைகட்ட ஒரு செங்கல்கூட வைக்கமுடியாது என பதிலடிக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து மேகதாது திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பிரதமர் மோடி நிச்சயம் சம்மதிக்க மாட்டார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். மேலும், மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 5ஆம் தேதி திட்டமிட்டபடி தஞ்சாவூரில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com