“பாஜகதான் தமிழகத்தின் எதிர்காலமாக இருக்கும்; இதை யாரும் தடுக்க முடியாது” - அண்ணாமலை பேட்டி

“பாஜகதான் தமிழகத்தின் எதிர்காலமாக இருக்கும்; இதை யாரும் தடுக்க முடியாது” - அண்ணாமலை பேட்டி

“பாஜகதான் தமிழகத்தின் எதிர்காலமாக இருக்கும்; இதை யாரும் தடுக்க முடியாது” - அண்ணாமலை பேட்டி
Published on

தமிழகத்தில் பாஜகவின் காலம் எதிர்காலமாக இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். 

தமிழக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை இன்று சென்னை கமலாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:

சொன்னதை திமுக செய்யவில்லை:

திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்களாகியும் ஒரு தேர்தல் வாக்குறுதியைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியதை திமுக செய்யவில்லை. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏழை, எளிய குடும்பங்களுக்கு நீட் வரப்பிரசாதமாக இருக்கிறது. நீட் தேர்வு நல்லது என்று வீதி வீதியாக சென்று மக்களிடம் சொல்வோம்’’ என்றார்.

தடுப்பூசி - மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது:

கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு சிறப்பாக செலுத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் 66 கோடி தடுப்பூசிக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ரூ.14,000 கோடி செலவில் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர் செய்திருக்கிறது. மாநிலவாரியாக ஃபார்முலாவின்படி தடுப்பூசி தரப்படுகிறது. அதில் 15 நாட்களுக்கு முன்பே தடுப்பூசி விவரம் மாநிலங்களுக்கு தரப்படுகிறது. தயக்கம் காரணமாக தடுப்பூசிக்கு வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது ஒரேநேரத்தில் தடுப்பூசிக்கு பெரும் தேவை இருக்கிறது.

என் கருத்து திரிக்கப்பட்டுள்ளது:

ஊடகங்கள் மீது பாஜகவிற்கு மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. தமிழக ஊடங்கள் குறித்து நான் பேசிய கருத்து திரித்துக் கூறப்பட்டுகிறது. பாரம்பரியமாக இருக்கும் ஊடங்களுக்கு முறையான அமைப்பு இருப்பது எனக்கு நன்றாகவே தெரியும். நான் கூறியது அதுவல்ல. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் பற்றியே கூறினேன். மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3.5 கோடி பேர் பயனடைந்திருக்கின்றனர்.

பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது:

ஒரு ஆண்டாக கட்சிக்கு உழைத்த எனக்கு பெரிய பொறுப்பை தந்துள்ளனர். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது; பாஜகவின் காலம் எதிர்காலமாக இருக்கும்’’ என்று பேசியிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் மூலை, முடுக்கெல்லாம் பாஜகவை கொண்டுசெல்வதே இலக்கு என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com