தமிழக பாஜக நிர்வாகிகளின் புதிய பட்டியல் வெளியீடு: யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு?

தமிழக பாஜக நிர்வாகிகளின் புதிய பட்டியல் வெளியீடு: யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு?
தமிழக பாஜக நிர்வாகிகளின் புதிய பட்டியல் வெளியீடு: யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு?

தமிழக பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். மாநில துணைத தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

மாநில துணைத் தலைவராக இருந்த நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்ற குழுத் தலைவர் பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரனிடம் இருந்து துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வி.பி.துரைச்சாமி, கே.பி. ராமலிங்கம், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட 11 பேர் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில இளைஞரணி செயலாளராக இருந்த வினோஜ் செல்வம், வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 13 பேர் மாநில பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலப் பொருளாளராக எஸ்.ஆர். சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் தீவிரமாக பணியாற்றி வந்த நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com