தமிழ்நாடு
டெல்லி பறக்கும் அண்ணாமலை? திடீர் பயணத்திற்கு காரணமென்ன?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதன் 9 ஆவது நாளான இன்று மதுரை கிழக்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதிகளில் அவர் நடைபயணம் மேற்கொண்டார். இந்நிலையில் அண்ணாமலை நாளை அவசரமாக டெல்லி செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக - பாஜக தலைவர்களிடையே வார்த்தை போர் கடந்த சில மாதங்களாகவே நடந்து வரும் சூழலில் சமீப நாட்களாக அது உச்சம் தொட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பாஜக தமிழக தலைவர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நாளை மாலை அண்ணாமலை சந்திக்கவுள்ளார். நட்டாவின் அழைப்பின் பேரில்தான் அண்ணாமலை டெல்லி செல்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.