மேலிடத்தில் புட்டு புட்டு வைத்த அண்ணாமலை... நாளை நடக்கவிருந்த கூட்டம் ஒத்திவைப்பு!

டெல்லி சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
அண்ணாமலை
அண்ணாமலைPT
Summary

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பா.ஜ.க உடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக, அதிமுக தலைமை சமீபத்தில் அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் திருப்புமுனையாக பார்க்கப்படும் நிலையில், டெல்லிக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை, அண்ணாமலை சந்தித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நாளை அண்ணாமலை தலைமையில் நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைப்பு!

Summary

நேற்று இரவு 8 மணியளவில் முதலில் நட்டாவை சந்தித்த அவர், இரவு 10.30 மணியளவில் அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, அதிமுக - பாஜக இடையில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com