Annamalai
Annamalai@BJP4TamilNadu | Twitter

ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட அண்ணாமலை!

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள ஜிம்சன் கை கடிகாரக் கடையில் அண்ணாமலை அணிந்துள்ள ரஃபேல் வாட்ச் வாங்கப்பட்டுள்ளது.
Published on

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரஃபேல் வாட்ச், கடந்த சில மாதங்களாகவே பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரஃபேல் வாட்ச்சின் ரசீதை காண்பிக்குமாறு பல்வேறு அமைச்சர்களுமே கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியலை வெளியிடப்போகிறேன். அத்துடன் ரஃபேல் வாட்ச் குறித்த விவரத்தை தெரிவிப்பேன்” என கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தன் ரஃபேல் வாட்ச்சின் ரசீதை பொதுவெளியில் காண்பித்தார் அவர்.

அண்ணாமலை காட்டிய ஆதாரத்தின்படி, கடந்த 2021ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சேரலாதன் என்பவர், கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் ஜங்ஷன் கை கடிகாரக் கடையிலிருந்து அதை வாங்கியுள்ளார். சேரலாதனை தன் நண்பர் என குறிப்பிட்டு அண்ணாமலை பேசினார்.

Annamalai
Annamalai@BJP4TamilNadu | Twitter

இந்தியாவிற்கு வந்த இரண்டு ரஃபேல் வாட்ச்களும் கோவை ஜிம்சனில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு சேரலாதன் ரஃபேல் வாட்சை வாங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com