அண்ணாமலைக்கு அரசியலும் தெரியல வரலாறும் தெரியல – அமைச்சர் பொன்முடி பேச்சு

அண்ணாமலைக்கு அரசியலும் தெரியல வரலாறும் தெரியல – அமைச்சர் பொன்முடி பேச்சு

அண்ணாமலைக்கு அரசியலும் தெரியல வரலாறும் தெரியல – அமைச்சர் பொன்முடி பேச்சு
Published on

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வரலாறும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை என அம்பத்தூரில் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக் டிகூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசினார்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வடக்கு பகுதி சார்பில் திமுக முப்பெரும் விழா 2022 சுயமான சுடர் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, பொன்முடி ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்.பாலு, நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்..

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி... முதல்வர் ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை சென்றார் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தெரிந்த ஒன்று, அதை துக்ளக் ஆசிரியரே ஒப்பு கொண்டுள்ளார். அண்ணாமலைக்கு வரலாறும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை, அப்படி பட்டவரை தலைவராக நியமித்து நமது உயிரை வாங்குகின்றனர் என காட்டமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்... கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் பிரிவினைகள் ஏற்படுத்தக் கூடாது என்பதைத்தான் பெரியார் வலியுறுத்தினார். ஒரு காலத்தில் கோயில் இருக்கும் தெருக்களிலும் உயர்ந்த சாதி மக்கள் இருக்கும் தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நடந்து கூட செல்ல முடியாது. தற்போது அப்படி ஒரு சம்பவம் எங்காவது நடக்க முடியுமா? இவை அனைத்தும் பெரியார் போட்ட பிச்சை என்பதை யாராலும் மறுக்க முடியாது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com