
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கொக்கு மீன் பிடிக்க காத்திருப்பது போல, 2026 தேர்தலில் வெற்றிபெற பாஜக காத்திருக்கிறது. பெரியார் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு உரிய மரியாதையுடன் நிறுவுவோம். பெரியாரின் கருத்துகள் பொது இடத்தில் இருக்கலாம். ஆனால் கோயில் அருகே இருக்கக்கூடாது.
ஸ்ரீரங்கம் கோயில் முன் இருக்கும் பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பதே எங்கள் தேர்தல் வாக்குறுதி. அறநிலையத் துறை ஏன் இருக்கக்கூடாது என்பதற்காக நான் இங்கு பேசுகிறேன். தமிழகத்தில் லஞ்சம் ஊழல் அதிகரித்துவிட்டது” என தெரிவித்தார். அவர் மேலும் பேசியவற்றை, இணைக்கப்பட்டுள்ள காணொளியில் முழுமையாக அறியலாம்.