மக்களவைத் தேர்தல் 2024: வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை #Video

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடனமாடி வாக்கு சேகரித்தார். இதேபோல பழம்விற்று ஓட்டு கேட்டார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இப்படி தேர்தல் களத்தில் நடந்த சுவராஸ்ய நிகழ்வுகளை தொகுப்பாக பார்க்கலாம்...
Annamalai
Annamalaipt desk

பாஜக

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அங்கு வள்ளி கும்மி நடனமாடி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, மக்களுடன் இணைந்து அண்ணாமலையும் உற்சாகமாக வள்ளி கும்மி நடனம் ஆடினார்.

அதிமுக

சென்னை பெரம்பூர் பகுதியில் வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவிற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீதி வீதியாக சென்று பரப்புரை மேற்கொண்ட அவர், மார்க்கெட் பகுதிக்கு சென்று பழ வியாபாரம் செய்தவாறு வாக்கு சேகரித்தார்.

திமுக

இதேபோல், சென்னை தியாகராய நகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

தண்ணீர் தெளித்தும் அவர் சுயநினைவுக்கு வரவில்லை. அந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கையில் தூக்கிக்கொண்டு ஓடினார். தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

நா.த.க.

போதை ஆசாமி - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் பரப்புரை
போதை ஆசாமி - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் பரப்புரை

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பாமக துண்டு அணிந்த நபர் ஒருவர் மது போதையில் அவரிட தகராறில் ஈடுபட்டார். இதனால், களஞ்சியம் பரப்புரையை நிறுத்திவிட்டு பாதியிலேயே அங்கிருந்து புறப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com