Annamalai  | BJP
Annamalai | BJPfile

“முடியாது என்று சொன்ன அனைத்தையும் செய்து முடித்துள்ளார் மோடி” – அண்ணாமலை

காங்கிரஸ் கட்சியினர் மற்றும் குடும்ப அரசியல் கட்சியினரை பார்வையாளர்கள் இருக்கையில் அமர வைக்க மக்கள் எண்ணி விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
Published on

செய்தியாளர்: ச.சரத்குமார்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஜீவானந்தம் சாலையிலிருந்து அண்ணா சிலை சாலை வழியாக ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நடைபயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அங்கு பேசிய அவர்...

அண்ணாமலை
அண்ணாமலைட்விட்டர்

“2024-ல் 5 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி உள்ளது. 2028-ல் இந்தியா உலகில் 3 வது பெரிய பொருளாதார நாடாக மாறும். பாஜகவின் குரல் சாமானிய மக்களின் குரல். திமுக அமைச்சரவையில் உள்ள 35 அமைச்சர்களில் 3 பேர் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.

Annamalai  | BJP
“இந்தியர்களை சோம்பேறிகளாக கருதினார் நேரு..” - பிரதமர் மோடி விமர்சனம்

காங்கிரஸ் கட்சியினர் மற்றும் குடும்ப அரசியல் கட்சியினரை, மக்கள் எதிர்க்கட்சி இருக்கையில் கூட அமரக்கூடாது என நினைத்து அவர்களை பார்வையாளர்கள் இருக்கையில் அமர வைக்க எண்ணி விட்டார்கள். முடியாது என்று சொன்ன அனைத்தையும் மோடி செய்து முடித்துள்ளார்.

மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்puthiya thalaimurai

அரக்கோண நாடாளுமன்ற தொகுதியில் நிற்கின்ற வேட்பாளரை யார் என்று பார்க்காமல், நரேந்திர மோடி நிற்பதாக எண்ணி மக்கள் வாக்களிக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சி அமையும்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com