‘தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன்’ - துணைவேந்தர் சூரப்பா
தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினருடனும் சுமூக உறவை பேணவே விரும்புவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்
சூரப்பா தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ள சூரப்பா தொலைபேசி வாயிலாக புதியதலைமுறைக்கு பேட்டி
அளித்தார். தமிழக அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினருடனும் சுமூக உறவை பேணவே விரும்புவதாக அவர்
தெரிவித்தார். இதற்கு முன்பும் வெளி மாநிலங்களில் பணியாற்றி உள்ளதால் தமக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை என்று கூறினார்.
அதுமட்டுமின்றி தமிழ் மொழியை கற்க விரும்புவதாகவும் சூரப்பா தெரிவித்தார். தம் மீதான விமர்சனங்களுக்கு பதில்தர
விரும்பவில்லை என்று தெரிவித்த சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக அடுத்தவாரம் பொறுப்பேற்க உள்ளதாக கூறினார்.
மேலும் நாட்டின் தலைசிறந்த பல்லைக்கழங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்பது மகிழ்ச்சி
அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.