"அண்ணா பல்கலைக்கழகத்தை கொரோனா சிகிச்சைக்காக ஒப்படைக்க வேண்டும்" - மாநகராட்சி ஆணையர் !

"அண்ணா பல்கலைக்கழகத்தை கொரோனா சிகிச்சைக்காக ஒப்படைக்க வேண்டும்" - மாநகராட்சி ஆணையர் !

"அண்ணா பல்கலைக்கழகத்தை கொரோனா சிகிச்சைக்காக ஒப்படைக்க வேண்டும்" - மாநகராட்சி ஆணையர் !
Published on

கொரோனா சிகிச்சைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை மாநகராட்சியிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

கொரோனா சிகிச்சையளிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக விடுதியைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்படைக்குமாறு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பல்கலைக்கழக விடுதியில் மாணவர்களின் உடைமைகள் இருப்பதால் இப்போதைக்கு ஒப்படைக்க முடியாது எனத் துணை வேந்தர் சூரப்பா கூறியதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார் "தேசிய பேரிடர் காலத்தில், அரசு கட்டடங்கள் மருத்துவ முகாமிற்காகப் பள்ளி கல்லூரி, பல்கலைக்கழகத்தைக் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி மூலம் கடிதம் எழுதியுள்ளோம். ஆகவே அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்ட காலத்தில் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்" என மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் அந்தச் சந்திப்பில் "கொரோனாவினால் சிகிச்சை பெற்று வரும் ஒரு நபருக்குத் தினமும் உணவுக்காக ரூ. 350 ரூபாய் செலவிடப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் லட்சம் வீடுகள்  வீடுகளில் தனிமைப்படுத்தும்  முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறோம். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களைத் தன்னார்வலர்கள் கண்காணித்து வருகின்றனர் அவர்களுக்குத் தேவையான உதவியும் செய்வார்கள். கடந்த 3 மாதங்களாகச் சென்னை மாநகராட்சியில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது" என்றார் பிரகாஷ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com