பாலியல் வன்கொடுமை வழக்கில் கைத்தான ஞானசேகரன்
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைத்தான ஞானசேகரன்புதியதலைமுறை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை.. கைது செய்யப்பட்ட நபர் குறித்து வெளியான பகீர் பின்னணி..

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் மீது 15 க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Published on

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் மீது கோட்டூர்புரம், மயிலாப்பூர், வேளச்சேரி, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட ஞானசேகரன் பாதிக்கப்பட்ட இளம் பெண் வீடியோ காலில் அடையாளம் காட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் காவல்துறையினரின் தொடர் விசாரணையில், இவர் கோட்டூர்புரம் மண்டபம் தெரு பகுதியில் நடைபாதை பிரியாணிக் கடை நடத்தி வருவதும் சம்பவத்தன்று (23 ம் தேதி) பிரியாணி கடையில் விற்பனை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்றதும், அங்கு தனிமையில் இருந்த காதலர்களை தனது மொபைலில் வீடியோ பதிவு செய்தது அதை வலைத்தளங்களில் போட்டு விடுவதாக கூறி மிரட்டி பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணிக் கடை விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு செல்வதும், அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கடந்த 23ஆம் தேதி தனிநபராக சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு இதேபோன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கோட்டூர்புரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com