அண்ணா பல்கலை தேர்வுகள் நவ.25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
கனமழை காரணமாக நவம்பர் 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், யூபிஎஸ்சி தேர்வு காரணமாக நவம்பர் 25 ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. சென்னையில் ஐந்து நாளாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
தொடர் மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்தது. இன்று வழக்கம் போல தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. ஆனால், நவம்பர் 19 ஆம் தேதி யூபிஎஸ்சி தேர்வு நடைபெறுவதால், மீண்டும் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.