\
கனமழை எதிரொலி: அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை எதிரொலி: அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை எதிரொலி: அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
Published on

தொடர் கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், 4 வளாகங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் பதிவாளர் கருணாமூர்த்தி அறிவித்துள்ளார்.

முன்னதாக, கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழையின் காரணமாக சென்னை பல்கலைகழகத்தின் கீழான கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com