\
அண்ணா பல்கலை. கேம்பஸ் மூலம் பணிக்கு தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு

அண்ணா பல்கலை. கேம்பஸ் மூலம் பணிக்கு தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு

அண்ணா பல்கலை. கேம்பஸ் மூலம் பணிக்கு தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு
Published on

அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாக நேர்காணல் மூலம் நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கு மாணவர்களை தேர்வு செய்தது நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஐடி நிறுவனங்கள், நிதித்துறை சார்ந்த நிறுவனங்களும் அதிகளவு மாணவர்களை தங்கள் நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்துள்ளன. கடந்த ஆண்டு 120 நிறுவனங்கள் கேம்பஸ் மூலம் ஆயிரத்து 100 மாணவர்களை தேர்வு செய்து வேலை வழங்கின. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 142 நிறுவனங்கள் வந்து ஆயிரத்து 700 மாணவர்களை தேர்வு செய்து பணி வழங்கியுள்ளன.

வரும் வாரங்களில் சிலிக்கான் லேப், கிண்ட்ரில் போன்ற நிறுவனங்கள் கேம்பஸ் நேர்க்காணலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கேம்பஸ் மூலம் பணிக்கு மாணவர்களை தேர்வு செய்திருப்பது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com