’அரியர் இருக்கா?’.. அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு

’அரியர் இருக்கா?’.. அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு
’அரியர் இருக்கா?’.. அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு

2001-2002 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதி வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

2001-2002-ஆம் கல்வியாண்டிற்கு பிறகு படித்த மாணவர்கள் 3-ஆவது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால், நடைபெறவுள்ள செம்ஸ்டர் தேர்வில் தேர்வெழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கடணத்துடன் ரூ.5,000 கூடுதலாக செலுத்த வேண்டும்.

இந்த தேர்வுக்கு www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவம்பர் 23- ஆம் தேதி முதல் டிசம்பர் 3 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள 9 தேர்வு மையங்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

'தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை- 25' என்ற பெயரில் வரைவோலை அல்லது ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம். அந்த அரியர் தேர்வு எழுதவுள்ள பாடங்களை மாணவர்கள் விண்ணப்பித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com