அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பி.இ. சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்விற்கு ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். www.tnea.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மே 31ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவை செய்யலாம். மே 12ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அதன் பிறகு மதிப்பெண் தகவல்களையும் பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தபால் மூலமோ, நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான கடைசி நாள் ஜூன் 3 ஆகும். ரேண்டம் எண் ஜூன் 20ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் 22ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு ஜூன் 27ஆம் தேதி தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த பிறகே விண்ணப்பிக்க முடியும் என வெளியான தகவல் தவறானது என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பாக மற்ற விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனவும் இதனால் கடைசி நேரத்தில் நெருக்கடியை தவிற்க முடியும் எனவும் அண்ணா பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.